பொள்ளாச்சியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி முதல் புனித லூர்து அன்னை ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒசானா பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி வளாகத்திலிருந்து புனித லூர்து அன்னை ஆலயம் வரை கிறிஸ்துவ மக்கள் தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பாடல்களை பாடி ஊர்வலமாக ஆலயத்திற்குள் சென்றனர்.



தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தவ முயற்சிகளையும் உபவாசமும் மேற்கொண்டனர்.

இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுவதால் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வரை சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற உள்ளது என ஆலய பங்குத்தந்தை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...