உப்பாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன்மூலம் 6060 ஏக்கர் பாசன வசதி பெறும்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் பாசனதிற்க்காக அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் வலது மற்றும் இடது கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உப்பாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் 6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபன், குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உப்பாறு அணை பாசன விவசாயச் சங்க தலைவர் கொங்கு ராசு, உப்பாறு அணை செயற்பொறியாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...