ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

கோவை காந்திபார்க் பகுதியில் எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில், மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை காந்திபார்க் பகுதியில், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை காந்திபார்க் பகுதியில், எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமை வகித்தார்.



மாநில துணைத் தலைவர் அழகு ஜெயபால், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நவீன், மாநில பொதுச் செயலாளர்கள் விஜிகுமார், பழையூர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.



இதை தொடர்ந்து அவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், பாஜகவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...