பொள்ளாச்சியில் ரமலான் நோன்பு திறப்பு - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் பசியை போக்க வேண்டும் என்பதுதான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



கோவை: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் சுக துக்கங்களில் பங்கு பெற்று அவர்கள் பசியை போக்கி இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பது ரம்ஜான் பண்டிகையின் நோக்கம்.

இந்நிலையில் பொள்ளாச்சி நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நல் விடியல் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் முத்துபாய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கிராத் ஓதி சாகுல் அமீது உவைஸ் துவக்கி வைத்தார்.



இந்த நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



ஏழை எளிய மக்கள் பசியுடன் இருக்கும்போது என்ன நிலையை அடைவார்களோ? அந்த நிலையை உணர வேண்டும் என்பதற்காக ரமலான் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் பசியை போக்க வேண்டும் என்பதுதான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் நோக்கம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...