கோவை தனியார் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவையில் சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்துக்காக சிகிச்சை பெற்றுவந்த சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த புகழ்ராஜா என்பவர் இன்று அதிகாலை மருத்துவமனையின் 5ஆவது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் புகழ்ராஜா (வயது37). கடந்த மார்ச் 19 ஆம் தேதி விபத்தில் சிக்கிய அவர், மேல் சிகிச்சைக்காக கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த புகழ்ராஜா, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 5ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியே கீழே குதித்தார்.

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அவருக்கு ஏற்பட்ட விபத்தில் மன ரீதியாகவும் புகழ்ராஜா பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தததும் தெரியவந்துள்ளது.

மேலும், புகழ்ராஜாவை கவனித்துக்கொள்ள அவரது உறவினர்களும் அறையில் இருந்த நிலையில், அதிகாலையில் அனைவரும் அசந்த நேரத்தில் ஜன்னல் வழியாக குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...