அவிநாசியில் சரக்குவேன் மீது மோதிய வேன் - போக்குவரத்து காவலர்கள் உயிர் தப்பிய சிசிடிவி வீடியோ!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் மையத் தடுப்பை உடைத்துக்கொண்டு மினி சரக்கு வேன் மீது மோதிய விபத்தில் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: அவிநாசியை அருகே மங்கரசுவளையபாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் அவிநாசி திருப்பூர் சாலையில் உள்ள வண்ண கூறை தகடு உற்பத்தி செய்யும் கம்பெனியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நேற்று, ஆட்டையம்பாளையம் அருகில் வேனை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தபோது, சிவசக்தி ஃபைனான்ஸில் பணிபுரியும் மேனேஜர் வீரமணி, பைனான்ஸ் ஊழியர்கள் கிருஷ்ணன் மற்றும் முருகேஷ் ஆகிய மூவரும் குமரேசனிடம் பணத்தை கட்டச் சொல்லி பேசி உள்ளனர்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், முருகேஷ் என்பவர் அத்துமீறி வேனை எடுத்துக்கொண்டு வேகமாக கோவை ரோட்டில் அவிநாசி நோக்கி வந்துள்ளார்.



அப்போது அதிவேகமாக வந்த அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து, வேகத்தடை மீது ஏறி மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த மைய தடுப்பை உடைத்ததோடு, அவிநாசி நோக்கி வந்த மினி சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி சரக்கு வேன் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த அவிநாசி போக்குவரத்து போலீசாரின் ஜீப்பின் பின் பகுதியில் லேசாக உரசி கவிழ்ந்து.



இந்த விபத்தில், மினி சரக்கு வேன் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. வேன் கட்டுப்பாட்டை இழந்து வருவதை கண்ட போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் வேகமாக அங்கிருந்த ஓடியதால் உயிர்தப்பினர்.

விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...