எம்பி தேர்தலில் 40 தொகுதிகளை கைப்பற்ற பாடுபடுங்கள்..! - தாராபுரத்தில் திமுக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரம் நகர ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்ற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரம் நகர ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, தாராபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கே எஸ் தனசேகர், மாநில மகளிரணி செயலாளர் சத்யா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழக செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறையைபோல 40க்கு 39 என்ற உறுப்பினர்களைபோல் இல்லாமல் இந்த முறை நடப்பதற்கு 40 என்ற இலக்கை பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கெல்லாம் உத்தரவிட்டுள்ளார்.



அதன்படி, தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக மாநில நெசவாளர் அணி செயலாளர் பொள்ளாச்சி நாகராஜ் நியமிக்கப்பட்டு, அவர் தலைமையில் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் தவறாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 20 சதவீதத்திற்கும் குறையாமல் உறுப்பினர்களை வரும் 20 நாட்களுக்குள் அந்தந்த பகுதி நகரச் செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் தலைமையில் கிளைக் கழக உறுப்பினர்கள் கட்டாயமாக சேர்க்க நாளை முதல் தீவிரமாக ஈடுபட வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...