கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது - 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த கணேசன் மற்றும் சுப்ரமணியன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தனிப்படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணிகளிலும் கோலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் நீலாம்பூர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.



அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (36) மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (40) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது, ஆட்டோ மற்றும் பைக் மூலம் கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.18,200 ரொக்கம், ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...