கோவையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை - 4 பேர் கைது!

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், மெய்யரசன், புவனேஷ், பரத் மற்றும் லலித்குமார் ஆகியோரை கைது செய்து, 1050 கிராம் கஞ்சா, 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர்பெரியநாயக்கன் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்கா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த மெய்யரசன், புவனேஷ், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பரத் மற்றும் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த லலித்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் எடையுள்ள கஞ்சா, ரூ.30,000 மதிப்புள்ள 3 கிலோ 200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 4 சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...