அனுப்பட்டி இரும்பு உருக்கு ஆலை குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்..! - பல்லடம் எம்.எல்.ஏ தகவல்!

பல்லடம் அருகே அனுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக 18வது நாளாக தொடரும் கிராம மக்களின் போராட்டம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அனுப்பட்டி இரும்பு உருக்காலை விவகாரம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் 18 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கால்நடை வளர்ப்பு, விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று 18 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பட்டி கிராம மக்கள் இந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் இரும்பு உருக்கு ஆலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். நடப்பு சட்டப்பேரவையில் ஆலையால் ஏற்படும் பிரச்சனை குறித்தும், கிராம மக்களின் போராட்டம் குறித்தும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தீர்மானத்தை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...