பல்லடம் அருகே விவசாயி கொலை முயற்சி வழக்கு - எதிர் தரப்பினர் விளக்கம்

பல்லடம் அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். விவசாயியான இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த நான்குபேர் நிலப்பிரச்னை தொடர்பாக ஜேசிபி இயந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அளித்த புகாரின் பேரில், எதிர் தரப்பினர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே நிலப்பிரச்னையில் விவசாயியை கொலை செய்ய முயன்ற வழக்கில் எதிர் தரப்பினர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.



கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிலப் பிரச்னையில் தன்னை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கூறி புகார் அளித்தார்.

புகாரின் பேரில், பல்லடம் போலீசார் ராஜேந்திரன், தனபால், ஞானபிரகாஷ் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் பரமசிவம் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படும் எதிர் தரப்பினர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது,

மாணிக்கபுரத்தில் 11 விவசாய குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடத்தினை பயன்படுத்த சதீஷ்குமார் பணம் கேட்டார். பணம் கொடுக்க மறுத்ததால் பொது வழித்தடத்தினை குழி தோண்டி சேதப்படுத்தினார். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி அளித்த புகார் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் சதீஷ்குமாருக்கு அவரது தாத்தா வழங்கியதாக கூறப்படும் 14 ஏக்கர் நிலத்தின் அசல் பத்திரம் தங்களிடம் உள்ளது, போலி பத்திரம் தயார் செய்து சதீஷ்குமார் நிலத்தினை கிரையம் செய்துள்ளார். சதீஷ்குமாரின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த போலி பத்திர விவகாரத்தை மறைப்பதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தன்னை கொல்ல முயல்வதாக நான்கு பேர் மீது சதீஷ்குமார் பொய் புகார் அளித்துள்ளார். வீடியோ ஆதாரத்தை நன்கு ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஏற்கனவே பொது வழித்தடத்தை சேதப்படுத்தியதற்காக சதீஷ்குமார் மீது கொடுக்கப்பட்ட புகாரினை போலீசார் விசாரணை மேற்கொண்டு சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொது வழித்தடத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயி சதீஷ்குமாரை நாங்கள் கொல்ல செய்ய முயற்சிக்கவில்லை. ஜேசிபி இயந்திரம் செல்லும் போது அவர் மீது மோதக்கூடாது என்பதற்காக தான் அவரின் கையைப் பிடித்து இழுத்தோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...