பொள்ளாச்சியில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்க கோரி விவசாயிகள் மனு

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.



அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.



இதனால் விவசாயத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.



இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி பிரிவினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...