காதலனுடன் சென்ற மகளை மீட்டு கொடுங்கள்..! - முன்னாள் ராணுவ வீரர் சாலையில் படுத்து போராட்டம்!

துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, கோவை - மேட்டுப்பாளையம் சாலையை நடுவே படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: துடியலூர் அருகே காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, மகளிர் காவல் நிலையம் முன்பு சாலையில் படுத்து முன்னாள் ராணுவ வீரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் கோவை - மேட்டுப்பாளையம் சாலையை மறித்து எனக்கு நியாயம் வேண்டும் என்று கூறி படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அவர், கோவை தொப்பம்பட்டி அருணாநகர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பதும், ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு திரும்பியவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரது மகள், வீட்டின் அருகிலுள்ள வாலிபரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார் என்பதும், தற்போது மகள் காதலனுடன் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனை கேட்க சென்ற தன்னை அடித்து விட்டதாகவும், தனது மகளை மீட்டுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திடீரென சாலையை மறித்து ஒருவர் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...