கோவை ஆலாந்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை மாவட்டம் ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பிச்சனூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு 416 பயனாளிகளுக்கு ரூ.5.39கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பிச்சனூர் ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, 416 பயனாளிகளுக்கு ரூ.5.39 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் இதைத் தொடர்ந்து ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ரூ.4.17 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங்,

ஆலாந்துறை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் மூர்த்தி, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...