உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கி்ங் கட்டணம் வசூல் - பயணிகள் புகார்

உடுமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை ரயில் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தை தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் வாகனங்களை பாதையை மறித்து நிறுத்துவதால், செல்வதற்கு இடமில்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று உடுமலை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது, ரயில் நிலையத்தில் பைக்குகளை நிறுத்துவதற்கு கட்டணமாக 12 மணி நேரத்துக்கு ரூ.15-ம், 24 மணி நேரத்துக்கு ரூ.20-ம் வசூலிக்கின்றனர். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே நிறுத்தி விட்டு சென்றாலும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் முறையாகப் பதில் அளிப்பதில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...