தாராபுரத்தில் திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் - அமைச்சர் பங்கேற்பு

தாராபுரத்தில் முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒரு கோடி திமுக சேர்க்கும் முகாமில் அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சமீபத்தில் தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில், தாராபுரம் 23வது வார்டு, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நகர திமுக, இளைஞர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்களுடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...