குடிநீர் வழங்ககோரி கோவை மலுமிச்சம்பட்டியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்!

மலுமிச்சம்பட்டி ஊராட்சி அவ்வை நகர் பகுதியில் 22 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதைக் கண்டித்து செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள 1 மற்றும் 2 ஆவது வார்டுக்கு உட்பட்ட அவ்வைநகர் பகுதியில் சுமார் 900 வீடுகள் உள்ளன.

இங்கு வழக்கமாக 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறை மற்ற தேவைக்கான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கடந்த 22 நாட்களாக அவ்வைநகர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதை கண்டித்து அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் 25 பேர் காலிக்குடங்களுடன் செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து அங்கு வந்த செட்டிபாளையம் போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அங்கு வந்த கவுன்சிலர்கள் சித்ரா மற்றும் கனகராஜ் குடிநீர் பிரச்சனை குறித்து விளக்கினர், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் இருந்ததாகவும் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர்.

இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...