கோவையில் தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான மெத்தை, சோபாக்கள் எரிந்து சேதம்!

கோவை அறிவொளிநகரில் தனியார் மெத்தை மற்றும் சோபா உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கோவைப்புதூர் அடுத்த அறிவொளிநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெத்தை மற்றும் சோபா உற்பத்தி நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, கோவைப்புதூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இருப்பினும், மளமளவெனப் பரவிய தீ கம்பனி முழுவதும் பற்றியதால் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்து குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின்போது ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்குள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...