தாராபுரம் அருகே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் - தீவிபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தச்சன்புதூரில் எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்த குடிசையில் மதுகுடிப்பகம் செயல்படுகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தச்சன்புதுரில் டாஸ்மாக் பார் ஓலை குடிசையில் இயங்கி வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டிவதைத்து வருகிறது.



இந்த நிலையில், எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்து மதுபார் செயல்படுவதால் அங்கு மதுப்பிரியர்கள் மது அருந்தும்போது, குடிபோதையில் சிகரெட், பீடி பிடித்துவிட்டு, அதை அணைக்காமல் அப்படியே கீழே போட்டு செல்கின்றனர்.



இது காற்றில் பறந்து கூரையின் மீது விழுந்தால் எந்த நேரமும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலகம் அருகிலேயே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...