காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திடுக..! - தாராபுரத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை தலைவர் கே.ரத்தினம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் என்.பத்மா, மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்தவேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயர்த்தி வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதிம் ரூ. 9 ஆயிரம் வழங்கவேண்டும்.



சிறப்பு காலமுறை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார், நிர்வாகி மணிமொழி மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்திரலேகா, சுஜாதா, செல்வம், புஷ்பா, ஆனந்தி, வசந்தாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...