உடுமலையில் ரூ.2.5 கோடியில் தார்ச்சாலை மேம்பாட்டு பணி தொடக்கம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அகலப்படுத்துதல் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பணியை தொடக்கி வைத்தார்.


திருப்பூர்: கடத்தூர் ஊராட்சியில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அகலப்படுத்துதல் பணி தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினர். தி.மு.க. அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் ஈஸ்வரசாமி (மேற்கு), சாகுல் ஹமீது (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்த ஆண்டில் சாலை அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல் மற்றும் தரம் உயர்த்தி பாலங்களாக கட்டுதல் போன்ற 57 பணிகள் 86.80 கி.மீ நீளத்திற்கு சுமார் ரூ. 42 கோடியே 46 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 19 பணிகள் 24.80 கி.மீ நீளத்திற்கு சுமார் ரூ.20 கோடியே 97 லட்சம் மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

சிறு பாலம் கட்டுதல் அதன் தொடர்ச்சியாக கணியூர்-கடத்தூர் சாலையில் ஒருவழித்தடத்திலிருந்து இரு வழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல் பணிக்கு ரூ.2 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 1.40 கி.மீ சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், மூன்று சிறுபாலங்கள் அகலப்படுத்தி திரும்பக் கட்டுதல், தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தற்பொழுது தொடங்கி வைக்கப்படுகிறது.

மீதமுள்ள கடத்தூர் வரையிலான சாலைப்பணி வரும் நிதி ஆண்டில் பணிகள் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக சாலை அகலப்படுத்தும் பணிகள் செய்து முடிக்கப்படும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி கோட்ட பொறியாளர் (மடத்துக்குளம் உட்கோட்டம், தாராபுரம் கோட்டம்) இளம் பூரணம், உதவி பொறியாளர் செங்குட்டுவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...