கீழ்பவானி பாசன கால்வாய்களை புனரமைக்க வேண்டும்..! - முதல்வருக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம்

கொங்கு மண்டல விவசாயிகள் நலன் காக்கும் வகையில் கீழ்பவானி பாசன கால்வாய்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


கொங்கு மண்டல விவசாயிகளின் நலனைக் காக்க முந்தைய அரசால் பிறப்பிக்கப்பட்ட G.O MS. NO. 276-ஐ வாபஸ் பெற்று, சூழலியல் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விவசாய மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் LBP கால்வாய்களை புனரமைக்க வேண்டும் என கார்த்திகேய சிவசேனாபதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கீழ்பவானி பாசன திட்டத்தில் அதிமுக அரசு அவசரகதியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்காக ஒரு அரசாணையை பிறப்பித்தது.

அதற்குப்பின் நவீனப்படுத்துதல் என்னும் போர்வையில் முற்றிலும் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்து மற்றும் லட்சக்கணக்கான நன்கு வளர்ந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறியவும் திட்டம் தீட்டியது.

இதற்கு கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு முதன்மை விவசாய சங்கங்களும்,விவசாயப் பெருங்குடி மக்கள் சார்பாகவும் அனைத்து பொதுமக்கள் சார்பாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் நடைபெற்றன.

2020ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் இன்றி கொண்டுவந்த இந்த திட்டத்தினை ஒரு சில ஒப்பந்த தாரர்களின் சார்பில் முனைப்போடு அன்றைய அதிமுக அரசாங்கம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் பாசன சபைகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு பாசன சபைகள் இத்திட்டத்தை செயல்படுத்த ரிட் மனு தாக்கல் செய்தார்கள். நமது அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கான்கிரீட் திட்டத்தை கைவிட முடிவு செய்து நீதிமன்றத்தில் அபிடவிட்டும் அரசு சார்பில் தாக்கல் செய்தது. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்காமால் கான்கிரீட் போடுமாறு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது சுற்றுப்புற சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். நான்கு ஒப்பந்ததாரர்கள் நலனிற்காக, ஒட்டுமொத்த விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிடும்.

அதிமுக அரசால் அவசரகதியில் விவசாய பெருங்குடி மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட G.O MS. NO. 276-ஐ வாபஸ் பெறுவது ஒன்றே இதற்கு நல்ல தீர்வாக அமையும். ஆகவே, தயவு கூர்ந்து G.O MS. NO. 276-ஐ வாபஸ் பெற்று, சுழலியல் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விவசாய மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் எவ்வித பாதிப்பும் அடையாமல் LBP கால்வாய்களை புனரமைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...