பல்லடம் அருகே தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம கும்பல் - விவசாயிகள் வேதனை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதுப்பாளையம் கவின்குமார் என்பவரது தோட்டத்தில் 40 தென்னங்கன்றுகளின் குருத்தில் ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்தினை கலந்து மர்ம நபர்கள் ஊற்றிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார்.



இவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார்.

கவின் குமார் என்பவருக்கும், அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்சனை குறித்து கவின் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கவின்குமார் தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது 40 தென்னங்கன்றுகளின் குருத்தில் ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்தினை கலந்து மர்ம நபர்கள் ஊற்றியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இரண்டு நாட்களில் தென்னங்கன்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக கருகிக்கொண்டே வந்துள்ளது.



40 தென்னங்கன்றுகளும் முழுவதுமாக கருகி காய்ந்துள்ளதால் தென்னங்கன்றுகள் மீது ஆசிட் ஊற்றியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், 40 தென்னங்கன்றுகளுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு பெற்று தரக்கோரியும், பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் கவின் குமார் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அவிநாசி பாளையம் காவல்துறையினர் தென்னங்கன்றுகள் மீது ஆசிட் ஊற்றி அழித்த மர்ம நபர்கள் பற்றியும் சந்தேகத்தின் அடிப்படையில் சுப்ரமணியன் என்பவரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலப் பிரச்சனை காரணமாக கவின்குமாரின் தோட்டத்தில் இருந்த தென்னங்கன்றுகள் மீது சுப்ரமணியன் என்பவரால் ஆசிட் ஊற்றப்பட்டதா? அல்லது மர்மநபர்கள் மீது யாரேனும் ஆசிட் ஊற்றினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...