உடுமலை பகுதியில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வியாபார நோக்கத்தை தவிர்த்து சொந்த தேவைக்காக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத்துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை பகுதிகளில் உள்ள குளங்களில் மண் எடுக்க வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குத் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இது தவிர நெல், வாழை, கரும்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல விதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.



இந்நிலையில் சமீப காலங்களாக அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு அதிகளவில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் மண் மலட்டுத் தன்மையடைந்து வருகிறது. இந்த பிரச்சினையிலிருந்து மண்வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இயற்கை விவசாயம் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

குளங்களில் தேங்கும் வளம் மிகுந்த வண்டல் மண்ணை எடுத்து வந்து நிலங்களில் போடுவது மண் வளத்தை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. அத்துடன் ஏரி, குளங்களில் அதிகப்படியாகத் தேங்கும் வண்டல் மண்ணை தூர் வாருவதால் நீர்த்தேக்கப் பரப்பு அதிகரிக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்படுகிறது.



ஆரம்ப கட்டத்தில் மண் எடுக்க வருவாய்த்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் விவசாயிகள் அல்லாதோர் அதிகளவில் மண் எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகளின் நிலம் அமைந்துள்ள கிராமம், நிலத்தின் அளவு, வகைப்பாடு மற்றும் கடந்த 2 ஆண்டுகளில் வண்டல் மண் எடுக்கவில்லை என்ற சான்று பெற்று வேளாண்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் சிட்டா. ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். அத்துடன் தரைமட்ட மேல் பகுதியிலிருந்து ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே வண்டல் மண் எடுப்போம். கரைகளை சேதப்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்தி நீர்நிலைகளை சேதப்படுத்தாமல் மண் எடுப்போம்.

வியாபார நோக்கத்தில் பயன்படுத்த மாட்டோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழியுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்

விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு அருகிலுள்ள வண்டல் மண் எடுக்க வாய்ப்புள்ள குளத்தை தேர்வு செய்து குறிப்பிட வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.பின்னர் அந்தந்த குளங்களில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...