கோவை மாநகரில் கழிவுநீரோடு பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - பொதுமக்கள் அவதி

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: கோவை மாநகர பகுதியில் திடீரென பெய்த கன மழையால் சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கோவையில் உள்ள பிரதான சாலைகளில் மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் சீர் இல்லாமல் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதனால் வாகன நெரிசல்கள் ஏற்படுவதாகவும் எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு இத்தகைய சாலை மற்றும் மேம்பால வேலைகளை தாமதிக்காமல் விரைவில் முடிக்க கோவை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...