உடுமலை அருகே ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13.75 சவரன் நகை கொள்ளை!

உடுமலை அருகே பட்டப்பகலில் ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 13.75 சவரன் நகைகள் கொள்ளைய அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பட்டப்பகலில் ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13.75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டி செல்லாண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தரணி(36). இவரது கணவர் பாலசுப்பிரமணியம். இருவரும் மலையாண்டி கவுண்டனூரில் ஸ்வீட் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே வழக்கம் போல் இருவரும் இன்று கடைக்கு சென்ற நிலையில், தரணி மட்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள், பீரோவில் இருந்த 13.75 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தரணி, உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...