கோவை சூலூரில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து - மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்!

சூலூர் அடுத்த நடுப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து உரசியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பெண், பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மகன் கண்முன்னே தாய் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே உள்ள கரவை மாதப்பூரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், பிரதீப்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், தாய் தங்கமணியும் மகன் பிரதீப் குமாரும், நடுப்பாளையம் பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.



அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்பக்கமாக உரசியதாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய நிலையில், கீழே விழுந்த தாய் தங்கமணி, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பிரதீப் குமார் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்த தங்கமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து, சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...