கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் கேஸ் வெளியேறியதால் பரபரப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற கோவை சரவணம்பட்டியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் திடீரென சத்தத்துடன் கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



கோவை: கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்விற்கு ஆளுநர் வருகை புரிந்தவுடன், தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.



அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்த ஏசி மிஷினில் இருந்து திடீரென சப்தத்துடன் கேஸ் வெளியேறியுள்ளது.

இதனால் அங்கிருந்த மாணவர்கள் பதற்றத்திற்குள்ளான நிலையில் உடனடியாக ஏசி மிஷின் நிறுத்தப்பட்டு அங்கிருந்த மாணவர்கள் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...