பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் வரி குறைப்பு - பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்!

பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு சொத்து வரி குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரிபல மடங்கு உயர்த்தப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வியாபாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி நகராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 50 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



சொத்து வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்..

மேலும் தொடர்ந்து பெருமாள் செட்டி வீதி, ராஜாமில் ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று வணிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...