திருப்பூரில் குடிநீருடன் கலந்து வந்த கழிவுநீர் - போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு!

திருப்பூர் மாநகராட்சியில் 36 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவு கலந்து வந்ததாக அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு மிலிட்டரி காலனி, சூசையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இப்பகுதியில் நேற்றைய தினம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. அதேபோல் குடிநீர் ஆனது மிகவும் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேயரிடம் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாகவும் நேற்று வந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து மாநகராட்சி மேயர் 4வது குடிநீர் திட்டத்தில் போடப்பட்டுள்ள குழாய்கள் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் பழுதடைந்து உள்ளதாகவும் இனி இது போன்ற தவறு நடக்காது விரைவில் பிரச்சனை சரி செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...