வீடு புகுந்து தர தரவென இழுத்து சென்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது

தெலங்கானாவில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய், நள்ளிரவில் போலீசார் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி வரவுள்ள சூழலில் இந்த கைது நடவடிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


ஹைதரபாத்: தெலங்கானா மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சயை, அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் தொகுதி எம்.பி ஆக இருக்கும் மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சயை நள்ளிரவில் அவரது கரிம்நகர் இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.



அப்போது போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்த பண்டி சஞ்சயை போலீசார் தர தரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது, அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அங்கிருந்து நால்கொண்டா மாவட்டத்தில் உள்ள பொம்மலா ராமராம் காவல் நிலையத்தில் பண்டி சஞ்சய் அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அவரது பாதுகாப்பு குறித்து பா.ஜ வினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்திலும் பா.ஜ., தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், கேள்வித்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் எனக்கூக்கூறியுள்ளது. வரும் சனிக்கிழமை, பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு வர உள்ள நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் தேசிய அரசியலின் மீது அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சயை, நள்ளிரவில் அவரது கரிம்நகர் இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...