சென்னையில் குளத்தில் மூழ்கி அர்ச்சகர்கள் உயிரிழப்பு - முதல்வர் நிவராணம் வழங்க உத்தரவு

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தருமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்வின்போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.


சென்னை: சென்னை மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பங்குனி உத்திர நாளை முன்னிட்டு சென்னை. மூவரசம்பட்டு பகுதி கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வின் போது, குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்கள் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பரசன் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...