சீமானின் உருவ பொம்மையை எரித்து திராவிடர் தமிழர் கட்சி போராட்டம்!

அருந்ததியினர் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கோரி கோவையில் அவரது உருவ பொம்மையை எரித்து திராவிடர் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோவையில் திராவிடர் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.



இக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஆதித்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இப்போராட்டத்தில் திடீரென சீமானின் உருவபொம்மையை எரித்து கண்டனங்களை பதிவு செய்தனர். உருவ பொம்மை எரிக்கப்பட்ட சில வினாடிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றினர்.



பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...