கோவை மாநகராட்சிக்கு கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் நியமனம்

கோவை மாநகராட்சியின் கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கூடுதல் துணை கமிஷனர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2021 நவம்பர் முதல் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் இருந்தார். அதற்கு முன், சென்னை ஆவடி நகராட்சியின் இணை இயக்குனராக (நிர்வாகம்) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...