உடுமலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்!

உடுமலை நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், அவற்றை அகற்றக் கோரி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் உத்தரவிட்டதை தொடர்ந்து பதாகைகள் அகற்றப்பட்டது.


திருப்பூர்: உடுமலை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தேர்த்திருவிழாவையொட்டி குட்டை திடல், தளி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக அமைக்கப்பட்ட இந்த விளம்பரப் பதாகைகளால் விபத்துகள் ஏற்படும் நிலை இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, அனைத்து விளம்பரப் பதாகைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.



இதனையடுத்து விளம்பரப் பதாகைகளை தாங்களாகவே முன் வந்து அகற்றினர்.

இதுகுறித்து விளம்பரப் பதாகை அமைப்பாளர்கள் கூறுகையில், திருவிழா போன்ற முக்கிய நாட்களில் தான் ஓரளவு வருவாய் ஈட்ட முடியும். முழுமையாக அனைத்து பதாகைகளையும் அகற்றக் கூறியதால் பல நிறுவனங்களிடம் பணம் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் கடும் இழப்பை சந்தித்துள்ளோம். குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாதுகாப்பான முறையில் விளம்பரப் பதாகைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...