10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - கோவையில் 41,526 மாணவர்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, சுயநிதி பள்ளிகள் என 526 பள்ளிகளில் பயிலும் 20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ மாணவிகள் 10-ம் வகுப்ப பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



கோவை: தமிழகத்தில் 2022-23ம் ஆண்டிற்கான 10வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 20ம் தேதி வரை இந்தப் பொதுத்தேர்வு நடைபெறுகிறது.



முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, சுயநிதி பள்ளிகள் என 526 பள்ளிகளில் பயிலும் 20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ மாணவிகள் இந்தப் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தனித்தேர்வு மையங்களையும் சேர்த்து 157 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வானது மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக 200 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 157 முதன்மை கண்காணிப்பாளர்கள், 157 துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...