தாராபுரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 86 பைக்குகள், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பேரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் இன்று ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் மற்றும் குண்டடம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாக 86 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த பைக்குகளுக்கு யாரும் உரிமை கோராததால், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பெயரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையிலும், தாராபுரம் டிஎஸ்பி தனராசு, காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையிலும், தாராபுரம் காவல் நிலையத்தில் வைத்து பகிரங்க ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 86 வாகனங்களும் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் திருப்பூர்,கோவை,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...