சாலையோர காய்கறி கடைகளை அகற்றுங்கள்..! - தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகள் புகார்

தாராபுரத்தில் உழவர் சந்தை அருகில் செயல்பட்டுவரும் சாலையோரக் கடைகளால் உழவர் சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகள் விற்க முடியாமல், அந்த காய்கறிகளை தரகர்களிடமே விற்க வேண்டிய அவலநிலை நிலவிவருவதாக தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி கோபாலகிருஷ்ணன், தாராபுரம் நகராட்சியில் மனு ஒன்று அளித்தார்.

அதில், தாராபுரம் உழவர் சந்தைக்கு வரும் வெளியில் உள்ள அனைத்து சாலைகளில் ஓரமாக சட்டவிரோதமாக காய்கறி கடைகளை உழவர் சந்தை நடக்கும் நேரத்தில் நடத்தி உழவர்களின் வாழ்வாதாரத்தை பறித்துவருகிறார்கள்.



இதுகுறித்து பலமுறை தாராபுரம் நகராட்சி ஆணையர் தாராபுரம் வட்டாட்சியர் கோட்டாட்சியரிடம் கவனயீர்ப்பு செய்து மனு கொடுத்தும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படாமலே இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது.



உழவர் சந்தைக்கு உழவர்கள் கொண்டுவரும் காய்கறிகள் விற்க இயலாமல், அவர்கள் மீண்டும் இதை தரகர்களிடமே விற்க வேண்டிய அவலநிலை நிலவிவருகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழ்நாடு அரசு நகராட்சியில் நிர்வாகம் இயக்குனரகம் கடந்த 26/9/2022 அன்று சுற்றறிக்கை எண் 48 45 2022- இன் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உழவர் சந்தை அருகே சட்டவிரோதமாக சாலையோர காய்கறி கடைகளை அனுமதிக்கவே கூடாது என உத்தரவிட்டது.

எனவே, அந்த சுற்றறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...