பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - திருப்பூர் மாவட்டத்தில் 32,171 மாணவர்கள் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 16 மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 32,171 மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியது.



அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 106 மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30,687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வுகள் 1484 பேர் என மொத்தம் 32,171 பேர் தேர்வில் எழுதுகின்றனர்.



தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 106தலைமை ஆசிரியர்களும் , 106 துறை அலுவலர்களும் , அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1780 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...