கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி சிறுத்தை கரடி நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனிடையே நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி உலாவரும் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் கிராம மக்கள், வெளியே செல்ல இயலாமல் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கருஞ்சிறுத்தைகள், இரண்டு சிறுத்தைகள், மூன்று கரடிகள் இதே பகுதியில் உலா வந்தன.



தற்போது சிறுத்தை நடமாடி வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...