உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தடையின்றி செயல்பட வேண்டும்..! - விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் 10ஆம் தேதி கொதிகலன் இளஞ்சூடு ஏற்றும் விழா நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டிலாவது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தங்குதடையின்றி செயல்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தங்குதடையின்றி செயல்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அரவைக்கு தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் தாலுகா விவசாயிகளிடம் பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலம் கரும்பு அரவை காலமாக உள்ளது. இந்த நிலையில் போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனால் ஆலையை முழுமையான அளவில் இயக்கி சர்க்கரை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இளஞ்சூடு ஏற்றும் விழா நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான கொதிகலன் இளஞ்சூடு ஏற்றும் விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆலையின் மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாக குழு தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள், கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள், ஆலையின் தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் முன்னிலையில் விழா நடைபெறவுள்ளது.

மேலும் சமுதாய நலக்கூடத்தில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கரும்பு அரவை துவங்க காலதாமதம் ஆன நிலையில் தற்பொழுது இளஞ்சூடு விழா 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையில் நடப்பாண்டில் ஆலை தடை இல்லாமல் முழுமையாக இயங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...