வால்பாறை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று சுப்பிரமணியசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் நல்லகாத்து பாலம் பகுதியில் இருந்து 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராம மக்கள் சார்பாக பக்தர்கள் 131 பால்குட தீர்த்தம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



மேலும் ஏராளமான பக்தர்கள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பால் காவடி மற்றும் பறவை காவடி சுமந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரை ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.



இந்த நிகழ்வில், சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...