கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் - கால அட்டவணை வெளியீடு

கோவை- சென்னை இடையேயான இயக்கப்பட உள்ள அதிகவேக வந்தே பாரத் ரயில் சேவைக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி முதல் இந்த ரயிலானது மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படவுள்ளது.


தமிழகத்தின் முதல் அதிவேக ரயில் சேவையான வந்தேபாரத் ரயிலை வரும் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். சென்னை-கோவை இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலானது கோவை- சென்னை இடையே புதன்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்படவுள்ளது. கோவையிலிருந்து வண்டி எண் 20644 காலை 6 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.



கோவையிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், மறுமார்க்கத்தில், வண்டி எண் 20643 சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்கள் வழியாக கோவையை இரவு 8.15 மணிக்கு அடையும்.

பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை ஏப்ரல் 8ம்தேதி தொடங்கிவைக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 9ம் தேதி முதல் இந்த கால அட்டவணைப்படி வந்தே பாரத் ரயில் சேவை இருக்கும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...