உயிரிழந்த 5 அர்ச்சகர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்குக..! - டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை நங்கநல்லூரில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிதி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்வின்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 இளம் அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்மை காலமாக தேரோட்டம் உள்ளிட்ட கோவில் நிகழ்ச்சிகளில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. வருங்காலங்களில் பெரிய அல்லது சிறிய கோவில் விழாக்கள் எதுவாயினும் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு வரைமுறைகளை வகுப்பது அவசியம்.

நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது உயிரிழந்த 5 அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...