உடுமலை நகரில் உலா வரும் குரங்கு - பொதுமக்கள் அச்சம்!

உடுமலை நகர பகுதிக்கு வந்த குரங்கு ஓன்று தளிரோடு, காந்திநகர், ராமசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தேடி உலா வருகிறது. வீடுகளில் வளர்க்கும் செடிகளில் உள்ள பழங்களை பிடுங்கித் தின்று சுற்றிவருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


உருக்குலைந்த வனம், மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் வாழ்விடமாகக் கொண்டது குரங்குகள். அடர்ந்த வனப்பகுதியில் விளைகின்ற பழங்களை உணவாக உட்கொண்டு ஆறுகள் மூலமாக தாகத்தை தீர்த்து குடும்பம் குடும்பமாக உயிர் வாழ்ந்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழைப்பொழிவு குறைந்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வனம் உருக்குழைந்து போனது.

அதைத்தொடர்ந்து, யானை, காட்டெருமை, கடமான், குரங்கு, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கின. அவற்றுக்கு அடிவாரப்பகுதியில் உள்ள அணைகள் தாகத்தை தீர்த்தும் உணவுத் தேவையை பூர்த்திசெய்து அடைக்கலம் கொடுத்தது.

அதன் பின்பு மழை பெய்ததையொட்டி யானை, காட்டெருமை, மான் உள்ளிட்டவை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றன. ஆனால் அடிவாரப் பகுதியின் சூழலில் வாழ பழகிக் கொண்ட குரங்கு, மயில், காட்டுப்பன்றிகள் தனது இனத்தை பெருக்கம் செய்து வாழ்விடத்தையும் அடிவாரப் பகுதியிலேயே அமைத்துக் கொண்டன.

அன்று முதல் இன்று வரையிலும் குரங்குகள் அடிவாரப் பகுதியில் வாழ்ந்து வருவதுடன், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கொண்டு வருகின்ற உணவுப்பொருட்களை பறித்துச்சென்று உணவாக உட்கொண்டு குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தாகத்தை தீர்ப்பதற்காக அலைந்து திரிந்து வருகின்றன. அதில் குரங்குகளும் அடங்கும்.

இதற்கிடையில், உடுமலை நகர பகுதிக்கு வந்த குரங்கு ஓன்று தளிரோடு, காந்திநகர், ராமசாமி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் உணவைத்தேடி அலைந்து கொண்டுள்ளன. வனப்பகுதிக்கு திரும்பிச் செல்வதற்கு வழி தெரியாமல், கட்டிடங்கள் மீது தாவியும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வந்த வண்ணம் உள்ளன. மேலும், வீடுகளில் வளர்க்கும் செடிகளில் உள்ள பழங்களை பிடுங்கித் தின்று சுற்றிவருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளில் இடையூறாக உலாவரும் இந்த குரங்கை, கூண்டு வைத்துப்பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடுமலைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...