உடுமலை அருகே ஆட்டோ - லாரி நேருக்கு நேர் மோதல் : 4 பேர் படுகாயம்!

பொள்ளாச்சியை சேர்ந்த அண்ணாதுரை (52) என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஒட்டன்சத்திரத்திற்கு ஆட்டோவில் சென்று திரும்பிய போது, உடுமலை அருகே ஆட்டோவும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் உள்பட 4 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே டேங்கர் லாரி மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் அண்ணாதுரை (52). இவர் தனது சரஸ்வதி (50) மற்றும் மகள் நந்தினி (26) ஆகியோருடன் தனது பேரனுக்கு பெயர் வைக்கும் நிகழ்விற்காக ஒட்டன்சத்திரம் நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விழா முடிந்து மூவரும் ஆட்டோவில் பொள்ளாச்சி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த குருசாமி (50) என்பவர் ஓட்டி வந்தார்.

இதனிடையே ஆட்டோ பெதப்பம்பட்டி அடுத்த லிங்கம்மநாயக்கன்புதூர் பிரிவு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியில் இருந்து குடிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் உட்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...