கோவை ஜி.என்.மில்ஸ் அருகே கேரள லாட்டரி விற்பனை - இருவர் கைது!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்த அலெக்சாண்டர் மற்றும் கணேசன் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5420 பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆவாளர் பழனியாண்டி தலைமையிலான காவலர்கள் ஜி.என்.மில்ஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்த சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் கணேசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த துடியலூர் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5,420 பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...