தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் அதிகாரிகள், மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன், கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியின் போது கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, டீக்கடை, பழக்கடை, செருப்பு கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் ஆங்காங்கே கடும் வெயிலிலும் நின்றபடியே பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தனர்.



அதன் அடிப்படையில் இன்று அதிரடியாக தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலையில், தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.



அப்போது அங்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...