தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய மாணவர்கள்!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி மத்திய பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதன்படி, தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகம், பொதுமக்கள் அதிகம் கூடும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் மற்றும் உபயோகித்து வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் சேகரித்து பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சந்தனமாரி முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



முன்னதாக தாராபுரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் பயிற்சி அலுவலர்கள் சுப்பிரமணியன் மேகலிங்கம் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராமர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் நாட்டுக்கு சேவையாற்றும் சிறப்புகள் குறித்து பாராட்டு தெரிவித்து பேசினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...