மதுக்கரை அருகே கார் மீது லாரி மோதி விபத்து - கணவன், மனைவி காயம்!

கோவை மதுக்கரை அருகே கேட்டரிங் உரிமையாளர் சிவதாஸ் தனது மனைவியுடன் காரில் சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில், இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மதுக்கரை அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ்(61). இவரது மனைவி நாகமணி (50). சிவதாஸ் அதே பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை சிவதாஸ் தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார். வாகனம் போடிபாளையம் பிரிவு அருகே வந்தபோது சிவதாஸ் வண்டியை திருப்ப முயற்சித்தார். அப்போது, எதிரே கேரளாவை நோக்கி வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் சாலையோரம் இருந்த 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக துடியலூர் யூனிட்டை சேர்ந்த பேரூர் சப் டிவிஷன் ஊர்க்காவல் படையினர் காரில் இருந்த கணவன், மனைவியை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து சிவதாஸ் மற்றும் அவரது மனைவி நாகமணியை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து மதுக்கரை போலீசார் விரைந்து வந்து, லாரியை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...